தண்ணீர் பிரச்சனை... கோஷ்டி மோதலில் 18 பேர் காயம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவோணம்:

தஞ்சாவூர் அருகே தண்ணீர் பிரச்சனையில் இரண்டு கோஷ்டியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 18 பேர்படுகாயமடைந்தனர்.

தஞ்சாவூர்-திருவோணம் அருகே உள்ளது தோப்பநாயகம் கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வரும்கோவிந்தனுக்கும், ரெங்கராஜன் என்பவருக்கும் நீண்ட நாட்களாகவே முன் விரோதம் இருந்து வந்தது.

கோவிந்தனின் உறவினரான பெரியதம்பி என்பவரின் மகன் முருகேசன் வீட்டிற்கு சில நாட்களாக குடிதண்ணீர்வரவில்லை. இதனால் ரெங்கராஜன் கோஷ்டியை சேர்ந்தவர்கள் வீட்டிற்கு செல்லும் குடிதண்ணீர் குழாய்இணைப்பை துண்டித்துவிட்டார் முருகேசன்.

இது குறித்து கேள்விப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் சூரியமூர்த்தி, முருகேசனை அழைத்து, அவர் மீது போலீசில்புகார் செய்யப்படும் என்று எச்சரித்தார். இதையடுத்து தான் செய்தது தவறு என்று முருகேசன் ஒப்புக்கொண்டார்.பிரச்சனை அத்துடன் முடிந்தது.

ஆனாலும் தன் உறவினரான முருகேசன் எதிர் கோஷ்டியிடம் சமாதானமாக போனது கோவிந்தனுக்கு கோபத்தைமூட்டியது. அவரது கோஷ்டியினரும் அதிகபட்ச கோபத்தில் இருந்தனர்.

இதையடுத்து முருகேசன், ரெங்கராஜன். ஊராட்சி தலைவர் சூரியமூர்த்தி ஆகியோரின் குடும்பத்தினரைகோவிந்தனும், அவருடன் இருந்தவர்களும் அவமானமாக, தரக்குறைவாக திட்டினர்.

இதனால் ரெங்கராஜன் கோஷ்டி ஆத்திரம் அடைந்தது. இதையடுத்து இரு கோஷ்டியினருக்கும் இடையே சண்டைமூண்டது. இரு தரப்பினரும் பயங்கரமான ஆயுதங்களுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு கடும் மோதலில்ஈடுபட்டனர்.

இதில் ரெங்கராஜன் கோஷ்டியைச் சேர்ந்த 9 பேரும், கோவிந்தன் கோஷ்டியைச் சேர்ந்த 9 பேரும்படுகாயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரிமருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் சம்பவம் குறித்து இரு கோஷ்டியினரும் போலீசில் புகார் செய்தனர். வட்டாத்தி கோட்டை போலீசார்வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற