கடத்தப்பட்ட விமானத்திலிருந்த சென்னை இஞ்ஜினியர் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த செவ்வாய்க்கிழமை நியூயார்க்கில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் போது தீவிரவாதிகள் கடத்திச் சென்றுஉலக வர்த்தக மையக் கட்டிடத்தின் மீது மோதிய விமானத்தில் பயணம் செய்தவர்களில் சென்னையைச் சேர்ந்தஇஞ்ஜினியர் ஒருவர் பயணம் செய்தது தெரிய வந்துள்ளது.


கடந்த செவ்வாய்க்கிழமை, நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையக்கட்டிடம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்நடத்தினர். தீவிரவாதிகள் அமெரிக்க பயணிகள் விமானத்தை கடத்தி அதை உலக வர்த்தக மையக் கட்டிடத்தின்மீது மோதச் செய்து, 110 மாடிகளைக் கொண்ட உலக வர்த்தக மையக் கட்டிடங்களை தரைமட்டமாக்கினர்.

இந்த சம்பவத்தில் உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் மீது மோதிய விமானத்தில் பயணம் செய்த அனைவரும்இறந்து போனார்கள். சென்னையைச் சேர்ந்த இஞ்ஜினியர் ஒருவரும் பலியானார். அவர் பெயர் வம்சி கிருஷ்ணா(வயது 30).

வம்சி கிருஷ்ணாவின் தந்ததையின் பெயர் முரளி கிருஷ்ணா. இவர் சென்னை, ஆவடி டாங்கி தொழிற்சாலையில்பணியாற்றி வருகிறார். இவரது இரண்டாவது மகன் வம்சி கிருஷ்ணா. இவருக்கு திருமணமாகி 2 வருடங்களாகிறது.இவரது மனைவியிண் பெயர் பிரசன்னா. இவர்களுக்கு குழந்தை ஏதும் இல்லை.

வம்சி கிருஷ்ணா பி.டெக். படித்தவர். இவர் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள டிஸ்ஸன்ட் என்ற கெமிக்கல் நிறுவனத்தில்மானேஜராக பணியாற்றி வந்தார். இவர் தன் மனைவியுடன் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள சிலிகான் வேலியில் வசித்துவந்தார்.

அலுவலக பணி நிமித்தமாக சில தினங்களுக்கு முன் பாஸ்டனுக்கு சென்றார் வம்சி. குறிப்பிட்ட காலத்தில் பணிகள்முடியாத காரணத்தால் அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் திரும்புவது தாமதமானது.

பணிகள் முடிந்ததும் கடந்த 11ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் செல்ல அமெரிக்க ஏர்லைன்சின் 11வது விமானத்தில்வம்சிக்கு டிக்கெட் கிடைத்தது. இந்த தகவலை தன் மனைவிக்கும் தெரிவித்தார்.

11ம் தேதி காலை விமானம் லாஸ்ஏஞ்சல்ஸ் நோக்கி பயணத்தை தொடங்கியது. அப்போது திடீரென விமானத்தைதீவிரவாதிகல் கடத்திச் செல்லும் விவரம் தெரியவந்தது. பயணிகள் அனைவரும் அதிரந்து போனார்கள்.

விமானம் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்படுகிறது என்ற செய்தியை தன் மனைவிக்கு செல் போன் மூலம்கூறினார் வம்சி கிருஷ்ணா. அவர் பேசிக் கொண்டிருந்த போதே விமானம் உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் மீதுமோதி வெடித்துச் சிதறியது.

மனைவியுடன் பேசியவாறே உயிரிழந்தார் வம்சி. ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என உணர்ந்த வம்சியின்மனைவி பிரசன்னா, அமெரிக்கத் தூதரகத்துடன் தொடர்பு கொண்டார். அவர்கள் லாஸ்ஏஞ்சலஸ்நோக்கி வந்தஅமெரிக்க ஏர்லைன்சின் 11வது விமானத்தை தீவிரவாதிகள் கடத்தி அதை உலக வர்த்தக மையக்கட்டிடத்தில்மோதி வெடிக்கச் செய்ததைக் கூறினர்.

கணவனை இழந்த பிரசன்னா கண்ணீர் வடித்து கதறியது காண்போர் நெஞ்சை கரையச் செய்தது,

வம்சி கிருஷ்ணாவுக்கு அமெரிக்க குடிமகனாக அங்கீகரிக்கப்பட்ட கிரீன் கார்டு கிடைத்து 10 தினங்கள் ஆகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற