இந்தியா, இஸ்ரேல் உதவியை பெறக் கூடாது: அமெரிக்காவுக்கு பாக். நிபந்தனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில் இந்தியாவையோ, இஸ்ரேலையோ எந்தவிதத்திலும் ஈடுபடுத்தக் கூடாது எனஅமெரிக்காவுக்கு பாகிஸ்தான் நிபந்தனை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தவிர தனது நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும், பொருளாதார உதவிகள் வழங்க வேண்டும் எனவும்பாகிஸ்தான் கோரியுள்ளது.

ஆனால், முக்கியக் கோரிக்கையாக இந்தியா, இஸ்ரேல் இரு நாடுகளையும் இந்தப் பிரச்சனையில் இருந்து தூரத்தில் வைக்கவேண்டும் என்று பாகிஸ்தான் கோரியுள்ளது.

தீவிரவாதிகளை ஒழித்துக் கட்ட சர்வதேப் படை அமைப்பது குறித்தும் பென்டகன் விவாதித்து வரும் நிலையில் பாகிஸ்தான்இந்தக் கோரிக்கையை வைத்துள்ளது.

ஆனால், பாகிஸ்தானிடம் இருந்து நிபந்தனைகளை எதிர்பார்க்கவில்லை, ஒத்துழைப்பைத் தான் எதிர்பார்க்கிறோம் எனஅமெரிக்கா கூறிவிட்டதாகத் தெரிகிறது.

அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா ஆகிய மூன்று நாடுகள் தான் தனது முக்கிய எதிரிகள் என பின் லேடன் கூறி வருகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

இதனால் தான் ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலில் இந்தியா, இஸ்ரேல் எந்தவகையிலும் வரக் கூடாது என பின் லேடனின்ஊதுகுழலான பாகிஸ்தான் கூறுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற