தயாராகின்றன இந்திய விமானத் தளங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஆப்கானிஸ்தானைத் தாக்க அமெரிக்காவுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத்தயாராக உள்ள இந்தியா அதற்காக தனது விமானத் தளங்களையும் தயார்படுத்திவருகிறது.

அமெரிக்கா கேட்கும்பட்சத்தில் மும்பை, புனே, கோவா ஆகிய இடங்களில் உள்ளவிமான தளங்களை வழங்க இந்தியா தயாராகி வருகிறது. இந்த விமானத் தளங்களில்இருந்து வான் வழியாக கராச்சியைக் கடந்து ஆப்கன் எல்லை பகுதி மீது தாக்குதல்நடத்துவது எளிது.

இப்போதைக்கு பாகிஸ்தானிடம் தான் விமானத் தளங்களை அமெரிக்கா கோரிவருகிறது. பாகிஸ்தானிடம் பெஷாவர், கியூட்டா, கோகத் ஆகிய இடங்களில் உள்ளவிமான தளங்களை அமெரிக்கா கோரி வருகிறது.

ஆனால், பாகிஸ்தான் வான் வெளியை பயன்படுத்தலாம், விமானத் தளங்களைதருவதில் பிரச்சனை உள்ளதாக அந் நாடு கூறி வருகிறது.

இந்த விமான தளங்களை பயன்படுத்த பாகிஸ்தான் அனுமதி மறுத்தால் அமெரிக்காஇந்தியாவின் உதவியை கேட்கும் என்று கருதப்படுகிறது.

மேலும், அமெரிக்காவின் கடற்படை கப்பல்களை நிறுத்தி வைக்கும் வசதிகள் மும்பை,கோவா விமானத் தளங்களுக்கு அருகிலேயே உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற