எல்லையில் ஏவுகணைகளை குவிக்கிறது ஆப்கானிஸ்தான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காபூல்:

ராணுவக் கிடங்குகளில் இருந்து ஆப்கானிஸ்தான் முழுவதும் உள்ள தலிபான் வீரர்களுக்கு கூடுதல்ஆயுதங்களையும் தளவாடங்களையும் தலிபான் அரசு அனுப்ப ஆரம்பித்துள்ளது.

ரஷ்ய ஸ்கட் ஏவுகைணகள் உள்பட நூற்றுக்கணக்கான ஏவுகணைகளும் பல்வேறு எல்லைப் பகுதியில்குவிக்கப்பட்டு வருகின்றன.

தனது வான் பகுதியை மூடிவிட்ட ஆப்கானிஸ்தான் அரசு எந்த நேரத்திலும் அமெரிக்கத் தாக்குதலை எதிர்பார்த்துக்கொண்டுள்ளது.

நாடு முழுவதும் டாங்கிகளும் அனுப்பப்பட்டு வருகின்றன.

பாகிஸ்தான் வழியாகத் தான் அமெரிக்கா தாக்கலாம் என்பதால் ஆப்கன்-பாகிஸ்தான் எல்லையில் 25,000வீரர்களையும் தலிபான் குவித்துள்ளது. இதையடுத்து பாகிஸ்தானும் ராணுவத்தை அந்த எல்லைப் பகுதிக்குஅனுப்பி வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற