சிங்கப்பூரில் பிடிபட்ட 2 இந்தியர்கள் விடுவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்:

சிங்கப்பூரிலிருந்து ஹாங்காங் செல்லவிருந்த விமானத்தில், தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில்போலீசாரிடம் பிடிபட்ட 2 இந்தியர்கள், திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

தன் அருகில் பயணம் செய்து கொண்டிருந்த வெளிநாட்டுப் பயணியிடம் இந்தியப் பயணி, தன்னை அறிமுகம்செய்து கொண்ட "லட்சணத்தால்" வந்தது வினை.

"நான் ஒரு பேஸ் கிடாரிஸ்ட்" என்று அவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். ஆனால், அதைச் சரியாகக்கேட்காத வெளிநாட்டுப் பயணியின் காதில், "நான் ஒரு போஸ்னியா டெரரிஸ்ட்" என்று தவறுதலாகவிழுந்துள்ளது.

இதையடுத்து, அந்த இந்தியப் பயணியையும் அவருடன் வந்திருந்த மற்றொரு இந்தியப் பயணியையும்போலீசாரிடம் மாட்டி விட்டுவிட்டார் அந்த வெளிநாட்டுப் பயணி.

சாங்காய் விமான நிலையத்தில் இறக்கப்பட்ட இந்த 2 இந்தியர்களையும் போலீசார் துளையோ துளையென்றுதுளைத்தெடுத்து விட்டனர்.

கடைசியில், தங்கள் மேல் எந்தத் தவறும் இல்லை என்பதை அந்த 2 இந்தியர்களும் தெளிவாக, ஆதாரப்பூர்வமாகஎடுத்துக் கூறியதை அடுத்து, அவர்கள் போலீசாரிடமிருந்து விடுவிக்கப்பட்டனர்.

நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் நடந்துள்ள தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகம் முழுவதிலும் விமானப்பயணிகள் கடுமையான சோதனைக்கு உள்ளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற