மும்பை:
அமெரிக்காவில் வெறும் கத்திகளைக் காட்டியே தீவிரவாதிகள் விமானங்களைக் கடத்தியதையடுத்து, ஏர்-இந்தியா நிறுவனம் பலமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
முதல்கட்டமாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்குச் செல்லும் ஏர்-இந்தியா விமானங்களில் இந்த பிளாஸ்டிக் கரண்டிகள்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்கா, இங்கிலாந்து விமானங்களில் பயணம் செய்வோர் கத்திகளையோ, பதப்படுத்தப்பட்ட டின் புட் ரக உணவுவகைகளையோ எடுத்து வர வேண்டாம் என ஏர்-இந்தியா அறிவுறுத்தியுள்ளது.
மேலு தடை விதிக்கப்பட்டுள்ள பொருள்களின் விவரம்:
அலுமினியத் தாள்களில் சுற்றப்பட்ட உணவுப் பொட்டலங்கள், பாலினால் செய்யப்பட்ட பர்பி, பால்கோவா, மாமிசம், போதைப்பொருள்கள், மருந்துகள், செடிகள், விதைகள், பழங்கள், காய்கறிகள், மண், விதைகள், உயிருள்ள பூச்சிகள், வளர்ப்பு மிருகங்கள்,மீன், புலித் தோலால் ஆன உடைகள், தீப்பெட்டி, கத்திரி ஆகியவற்றையும் விமானத்தில் எடுத்து வரக் கூடாது என ஏர்-இந்தியாகூறியுள்ளது.
அமெரிக்கா மீது நோய் பரப்பும் வைரஸ்கள், பாக்டீரியாக்களைக் கொண்டு உயிரியல்ரீதியிலான தாக்குதல் நடக்கலாம் என அந்நாடு அஞ்சுவதால் ஏர்-இந்தியா பூச்சியிலிருந்து மண் வரை எல்லாவற்றையும் தடை செய்துள்ளது.
அதே போல தீவிரமாக சோதனையிடப்பட்ட பின்னரே விமானத்தில் ஏற அனுமதிக்கப்படும் என்பதால், விமானம் கிளம்பும் முன் 4மணி நேரத்துக்கு முன்பாகவே விமான நிலையத்துக்கு வந்துவிட வேண்டும். செக்-இன் கவுண்டர்கள் விமானம் கிளம்புவதற்கு 90நிமிடங்களுக்கு முன்பே மூடப்பட்டுவிடும் என்றும் ஏர்-இந்தியா அறிவித்துள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!