சீக்கியர்கள் மீது தாக்குதல்: அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

அமெரிக்காவில் சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறையிடம் இந்தியத்தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறிதது இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் துயரத்தை இந்தியர்கள்உணர்ந்துள்ளார்கள். அமெரிக்காவுக்கு அனைத்து உதவிகளையும் புரிய இந்தியா தயாராக உள்ளது. இந் நிலையில்சீக்கியர்கள் மீது அமெரிக்கர்கள் தாக்குதலில் இறங்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதர் லலித் மான்சிங் வெள்ளை மாளிகை அதிகாரிகளுடன் இது தொடர்பாகஆலோசனை நடத்தினார். இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.

இந்தியர்கள், அரேபியர்கள் மீது தாக்குதல் நடத்துவதை அமெரிக்க எம்.பிக்கள் பலரும் கண்டித்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற