காஷ்மீர் பிரச்சனையில் தலையிட அமெரிக்கா மறுப்பு: பாக். கோரிக்கை நிராகரிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

காஷ்மீர் பிரச்சனையில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் விதித்துள்ள நிபந்தனையைஅமெரிக்கா ஏற்காது என்று அந்நாட்டுத் தூதரக அதிகாரி தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் மீது போர்தொடுக்க அமெரிக்கா தயாராகி வருகிறது. இந்தத் தாக்குதலுக்கு உதவவேண்டுமானால் போர் கூட்டணியில் இந்தியா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் படைகளைச் சேர்க்கக் கூடாது.காஷ்மீர் பிரச்சனையில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்பது உள்ளிட்ட, இந்தியாவுக்கு எதிரான சிலநிபந்தனைகளை பாகிஸ்தான் விதித்துள்ளது.

ஆனால் இந்த நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்காது என்று அந்நாட்டின் இந்தியத் தூதரக அதிகாரி ராபர்ட் போக்கூறினார். இது பற்றி அவர் மேலும் கூறியதாவது,

காஷ்மீர் பிரச்சனை பற்றி பாகிஸ்தான் எந்த நிபந்தனைகளை விதித்தாலும் அதை அமெரிக்கா ஏற்காது. ஆனால்பன்னாட்டுப் போர்ப்படைகளை கூட்டணி சேர்ப்பதைப் பற்றி பாகிஸ்தான் நிபந்தனை எதுவும் விதிக்கவில்லை.

இந்தியா உட்பட அனைத்து உலக நாடுகளிலும் தீவிரவாதத்தை அடியோடு ஒழிப்பதே அமெரிக்காவின்நோக்கமாகும். இதற்கு உலக நாடுகள் முழுவதும் ஆதரவு அளித்து வருகின்றன.

மேலும் அமெரிக்காவில் அரேபியர்கள் என நினைத்து சீக்கியர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கைஎடுக்கப்படும். அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற