புனிதப் போருக்கு தயாராகுங்கள்: ஆப்கானியர்களுக்கு தலிபான் அழைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

காபூல்:

அமெரிக்காவுக்கு எதிராக ஜிகாத் (புனிதப் போர்) நடத்த தயாராகுங்கள் என தனது மக்களுக்கு தலிபான்ஆட்சியாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

பின்லேடனை ஒப்படைப்பது குறித்து ஒரு பக்கம் பேசினாலும் மறுபுறம் போருக்கும் ஆப்கானிஸ்தான் தயாராகிவருகிறது. பின்லேடனை ஒப்படைப்பதாகக் கூறி அமெரிக்கத் தாக்குதலை தாமதமாக்கி தனக்குக் கிடைக்கும் காலஅவகாசத்தைப் பயன்படுத்தி படைகளை தயார்படுத்தி வருகிறது ஆப்கானிஸ்தான்.

ஆப்கான் அரசுத்து சொந்தமான பக்தார் என்ற செய்தி நிறுவனம் கூறுகையில், நமது நாட்டுக்குள் ஊடுவப் போகும்அமெரிக்கர்களை வெல்லத் தயாராகுங்கள். பின்லேடனுக்கும் அமெரிக்கத் தாக்குதலுக்கும் எந்தத் தொடர்பும்இல்லை. ஆனால், அவரைக் காரணம் காட்டி தாக்க வருகிறார்கள்.

அவர்களை திருப்பித் தாக்கத் தயாராகுங்கள் என்று கூறியுள்ளனர் தலிபான்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற