பத்திரிக்கையாளர்கள் சுதந்திரம் எல்லையில்லாதது அல்ல

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

பத்திரிக்கையாளர்கள் சுதந்திரம் எல்லையில்லாதது அல்ல. அது கட்டுப்படுத்தக் கூடியதே என்று சென்னைஉயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

சென்னையில் நடந்த திமுக பேரணியின்போது நடந்த வன்முறை குறித்து விசாரிக்க அரசு சார்பில் நீதிபதிபக்தவச்சலம் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கமிஷன் தனது அறிக்கையில், பத்திரிக்கையாளர்கள் பேரணிகளின்போது எந்த இடத்தில் இருக்கவேண்டும், எவ்வளவு தூரத்திலிருந்து செய்தி சேகரிக்க வேண்டும் என்பது குறித்த பரிந்துரைக்குமாறு அரசுசார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து நக்கீரன் ஆசிரியர் ஆர்.ஆர்.கோபால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரிக்க வரையறை செய்து நெறிறைகள் விதிப்பதுபத்திரிக்கையாளர் சுதந்திரத்தில் தலையிடுவது போலாகும். எனவே இந்த அம்சத்தை கமிஷன் விசாரணைஅம்சங்களிலிருந்து நீக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி தினகரன், பத்திரிக்கையாளர்கள் சுதந்திரம் என்பது எல்லையில்லாதது அல்ல. அதுவும்சில எல்லைக்குட்பட்டதுதான். கட்டுப்படுத்தக் கூடியதுதான்.

கமிஷன் விசாரணையில் யாரும் தலையிட முடியாது. கேள்வி எழுப்ப முடியாது. கமிஷன் தனது பரிந்துரைகளைஇன்னும் கொடுக்காத நிலையில் இந்த வழக்கே தேவையில்லை.

நடந்த உண்மையை அறிந்து அறிக்கை கொடுப்பது மட்டுமே கமிஷனின் வேலை. அதன் பிறகு முடிவெடுக்கவேண்டியது அரசுதான் என்று கூறிய அவர் கோபாலின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற