நகராட்சித் தேர்தலில் கண்ணப்பன் போட்டி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மக்கள் தமிழ் தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.கண்ணப்பன் நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என்று தெரிகிறது.

உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் மக்கள் தமிழ் தேசம் போட்டியிடுகிறது. இக்கட்சிக்கு கடந்த சட்டசபைத்தேர்தலில் படுதோல்வி கிடைத்தது. இருப்பினும் மனம் தளராத அக்கட்சித் தொண்டர்கள் வருகிற உள்ளாட்சித்தேர்தலில் தங்களது பலத்தை நிரூபிக்க ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

அக்கட்சித் தலைவர் கண்ணப்பன் நகராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடலாம் என்று கட்சி வட்டாரத்தில் பேச்சுஅடிபடுகிறது. இருப்பினும் எந்த நகராட்சி என்பதை அவர் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் கட்சிவட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இளையாங்குடி அல்லது வேறு நகராட்சி ஒன்றில் அவர் போட்டியிடலாம் என்றுதெரிகிறது.

கண்ணப்பன் நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டால் அவரை எதிர்த்து அதிமுக தரப்பில் முன்னாள்அமைச்சர் தமிழ்க்குடிமகன் நிறுத்தப்படலாம் என்றும் ஒரு பேச்சு அதிமுக வட்டாரத்தில் இருக்கிறது. ஆனால்தமிழ்க்குடிமகன் நகராட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, தமிழகம் முழுவதிலும் இக்கட்சி சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் கட்சிஅலுவலகங்களில் மனு செய்து வருகின்றனர். இதுவரை 9000க்கும் மேற்பட்டோர் மனு செய்துள்ளதாக கட்சிவட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 20ம் தேதி வரை மனுக்களை சமர்ப்பிக்கலாம் என்று மக்கள் தமிழ் தேசம் கட்சியின் தலைமைஅறிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற