ஜெயலலிதா பதவியைப் பறிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஜெயலலிதா முதல்வராக நியமிக்கப்பட்டது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது.

இதையடுத்து அவர் உடனடியாக பதவி விலக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் இந்தத் தீர்ப்பை அளித்தது. இதில் 3 நீதிபதிகள் ஜெயலலிதாவுக்கு எதிரானதீர்ப்பையும் 2 நீதிபதிகள் ஜெயலலிதாவுக்கு ஆதரவான தீர்ப்பையும் அளித்தனர்.

ஆனால், பெரும்பான்மையான நீதிபதிகள் (3 பேர்) அளித்த தீர்ப்பே இறுதியானது என்பதால் அந்தத் தீர்ப்பை மற்ற இருநீதிபதிகளும் ஏற்றுக் கொண்டனர்.

இந்த பெஞ்சின் தலைவரான நீதிபதி பரூச்சா, நீதிபதி சபர்வால், நீதிபதி ருமா பால் ஆகியோர் ஜெயலலிதா பதவி ஏற்றதை எதிர்த்துதீர்ப்பளித்தனர்.

ஆனால், நீதிபதி பட்நாயக், நீதிபதி பிரிஜேஷ் குமார் ஆகியோர் இந்தத் தீர்ப்புக்கு மாறாக தீர்ப்பளித்தனர். 5 பேரில் 3 நீதிபதிகள்அளித்த தீர்ப்பு தான் மெஜாரிட்டியானது என்பதால் அந்தத் தீர்ப்பை ஏற்பதாக மற்ற இரு நீதிபதிகளும் தெரிவித்தனர்.

இதனால் ஜெயலலிதா பதவி இழப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற