உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய வழக்கில் இன்று தீர்ப்புவழங்கப்படுகிறது.

வரும் அக்டோபர் 16, 18 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறும் என்று மாநிலத்தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஆனால் வாக்காளர் பட்டியலில் பல குறைபாடுகள் இருப்பது உட்பட பலகாரணங்களைச் சட்டிக்காட்டி, தேர்தலைத்தள்ளிவைக்கவேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை வக்கீல் பொன்னுசாமி உட்பட பலர் தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், வாக்காளர் பட்டியலில் பல லட்சம் வாக்காளர்கள் விடுபட்டுள்ளனர். மேலும் இறந்தவர்களின்பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படவில்லை.

தமிழகத்தில் உள்ள 6 மேயர் பதவிகளில் குறைந்தது 2 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்ப்படவேண்டும். ஆனால்அவ்வாறு ஒதுக்கப்படவில்லை. மேலும் சுழற்சி முறையில் இடஒதுக்கீடு செய்யப்படுவதால் 10 ஆண்டுகள்கழித்துதான் பெண்கள் தொகுதிகளில் ஆண்கள் போட்டியிடமுடிகிறது.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை சென்னை தலைமை நீதிபதி சுபாஷன்ரெட்டி, நீதிபதி சிவசுப்ரமணியம் ஆகியோர் விசாரித்தனர்.

நேற்றுடன்(புதன்கிழமை) விசாரணை முடிவடைந்தது.

இன்று காலை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுமா அல்லது தள்ளிவைக்கப்படுமா என்று, இன்று வழங்கப்படும்தீர்ப்பிலிருந்து தெரியும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற