காவிரி ஆணையக் கூட்டம் .. ஜெ. பங்கேற்கிறார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிரதமர் வாஜ்பாய் கூட்டியுள்ள காவிரி நதி நீர் ஆணைய கூட்டத்தில் கலந்து கொள்ள முதல்வர் ஜெயலலிதா டெல்லி செல்கிறார்.

காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விட கர்நாடகம் மறுத்து விட்டது. இதையடுத்து தமிழக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுடெல்லி சென்று பிரதமர் வாஜ்பாயிடம் முறையிட்டது. அதற்குப் பிறகு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிய கர்நாடக முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணா, தண்ணீர் திறந்து விட முடியாத நிலையில் கர்நாடகம் இருப்பதாக பிரதமர் வாஜ்பாய்க்குத் தெரிவித்தார்.அத்தோடு அனைத்துக் கட்சிக் குழுவினரோடு டெல்லி சென்று பிரதமரிடம் நேரிலும் தெரிவித்தார்.

இந்த நிலையில் காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாக கூட்டுமாறு பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். ஆனால்பதில் ஏதும் வராத நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழகம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த நிலையில் 22ம் தேதி காவிரிநதி நீர் ஆணையத்தின் கூட்டத்தை பிரதமர் கூட்டியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். இதற்காக வியாழக்கிழமை இரவு அவர் டெல்லிபயணமாகிறார். கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் அவர் சந்திப்பார் என்றுதெரிகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற