போயஸ் கார்டனில் அமைச்சர்களுடன் ஜெ. சந்திப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தனது பதவியைப் பறிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அமைச்சரவைசகாக்களுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு வந்தவுடனேயே போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில்அமைச்சர்களும் எல்.எல்.ஏக்களும் கட்சித் தொண்டர்களும் ஆயிரக்கணக்கில் குவிந்தனர்.

இதில் அமைச்சர்களை மட்டும் உள்ளே அழைத்த ஜெயலலிதா அவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் என்.ஆர். சந்திரனும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்தக் கூட்டம்தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற