பின் லேடன் வெளியேறினாலும், ஆப்கன் தாக்கப்படும் - பாகிஸ்தான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

ஆப்கானிஸ்தானில இஸ்லாமிய மதகுருமார்கள் எடுத்துள்ள முடிவு முக்கியமானதுதான். ஆனால் இந்த முடிவால்அமெரிக்கா தன்னுடைய தாக்குதலை நிறுத்தப் போவதில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அப்துல்சத்தார் கூறினார்.

அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பின் லேடன் தானாக முன் வந்து, ஆப்கனை விட்டு வெளியேற வேண்டும் என்று மதகுருமார்கள் கூட்டத்தில்ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

இந்த முடிவு முக்கியமானதுதான். விருந்தாளிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது ஆப்கனின் மரபு. அந்த மரபையேஅவர்கள் தற்போதும் கடைப்பிடித்து, பின் லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க அவர்கள் மறுத்துள்ளனர்.

ஆனால், இந்த முடிவு காரணமாக ஆப்கன் மீதான தன்னுடைய தாக்குதலை அமெரிக்கா நிறுத்தாது. விரைவில்அமெரிக்கப் படைகள் ஆப்கனைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, பின் லேடன் ஆப்கனை விட்டு வெளியேறும் பட்சத்தில், அவருக்கு அடைக்கலம் கொடுத்துஆதரவளிக்க வேண்டும் என்று இராக்கை தலிபான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது துரதிருஷ்டவசமானது என்றார்சத்தார்.

இந்நிலையில், அமெரிக்காவுக்குப் பாகிஸ்தான் ஆதரவு கொடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி பாகிஸ்தானில்உள்ள சில மதவாத அமைப்புகள் இன்று ஸ்டிரைக் நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற