இந்நாள் ஒரு பொன் நாள் - சு. சுவாமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது செல்லாது என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, "தமிழகத்திற்கு இந்தநாள் ஒரு பொன் நாளாகும்" என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

சுவாமி மேலும் கூறியதாவது:

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, ஜெயலலிதாவுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கே ஒரு பாடமாக இருக்கும்.தேர்தலில் போட்டியிட முடியாத ஒருவரை முதல்வராகத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்று இனியாவது தமிழக மக்கள்கற்றுக் கொள்ளட்டும்.

தமிழகத்தில் தற்போது வேறு ஒரு முதல்வரை நியமிக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது.

ஜெயலலிதாவை முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தது சட்டத்திற்கு எதிரான ஒரு செயலாகும்.இதனால், தமிழகத்தில் உடனடியாக ஜனாதிபதி ஆட்சியைப் பிரகடனம் செய்ய வேண்டும் என்றார் சுவாமி

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற