பின்லேடன் ஆப்கானை விட்டு போய்விட்டார்: தலிபான் நாடகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காபூல்:

ஒசாமா பின்லேடன் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறிவிட்டார் என்று தலிபான் அரசு கூறியுள்ளது.

ஒசாமா பின் லேடன் தானாக ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறவேண்டும் என்று கடந்த 2 நாட்களாக நடந்தகூட்டத்தின் முடிவில் மதகுருமார்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஒசாமா பின் லேடனை ஒப்படைக்க ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா 3 நாள் கெடு விதித்திருந்தது. அந்த 3 நாள்கெடு புதன்கிழமையுடன் முடிவடைந்தது.

"இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நடந்த ஆப்கானிஸ்தானில் முஸ்லீம் மதகுருமார்கள் கூட்டம் வியாழக்கிழமைமுடிவடைந்தது.

அந்தக் கூட்டத்தில் ஒசாமா பின் லேடன் தானாக ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறவேண்டும் என்றுகோரிக்கை விடப்பட்டது.

தன்னை நாட்டை விட்டு மதகுருமார்கள் வெளியேறச் சொல்வார்கள் என்பதை முன்னதாகவே தனது உளவுப்பிரிவினர் மூலம் அறிந்த பின்லேடன் 4 நாட்களுக்கு முன்பே ஆப்கானிஸ்தனை விட்டு வெளியேறி விட்டதாக "திநியூஸ்" என்ற தலிபான் ஆதரவு செய்தித்தாள் கூறியுள்ளது.

அவர் நிச்சயமாக ஆப்கனில் இல்லை என்றும், ஆனால் எங்கு சென்றார் என்பது பற்றி எதுவும் தெரியவில்லைஎன்றும் தலிபான் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனால், அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க தலிபான்கள் நாடகமாடுவதாகக் கருதப்படுகிறது.

பாகிஸ்தானின் யோசனையின்பேரில் மத குருமார்கள் கூட்டத்தைக் கூட்டிய ஆப்கனிஸ்தான் பின்லேடனைவெளியேறச் சொல்லி ஒரு அறிக்கையை மட்டும் விட்டு விட்டு இப்போது லேடன் போயிவிட்டார் என்றுதலிபான்கள் கூறுகின்றனர்.

இதை நம்ப எந்த நாடும் தயாராக இல்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற