ஜெ. முதல்வராக நீடிப்பாரா? - இன்று தீர்ப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதை எதிர்த்து சப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்றுவழங்கப்படுகிறது.

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்த ஒருவருக்கு (ஜெயலலிதாவுக்கு) முதல்வராகபதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது தவறு என்றும்.

முதல்வராக ஜெயலலிதா பதவியில் நீடிக்கத் தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரி சப்ரீம் கோர்ட்டில் கடந்தமாதம் செல்வராஜ் என்ற வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி பரூச்சா தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.

இந்த வழக்கில் ஜெயலலிதாவின் சார்பாக வக்கீல் வேணுகோபாலும், தமிழக அரசின் சார்பாக பி.பி.ராவும்ஆஜரானார்கள்.

மனுதாரரின் சார்பில் வக்கீல் நாரிமான் ஆஜரானார். மத்திய அரசின் சார்பில், இந்திய அரசின் அட்டர்னி ஜெனரல்சோலி சொராப்ஜி ஆஜராகி வாதாடினார்.

அனைவரும் பரபரப்புடன் எதிர்பார்க்கும் இந்த வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற