ஓடும் ரயிலில் ரூ. 4 லட்சம் கொள்ளை

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை:

ஈரோடு அருகே ஓடும் ரயிலிருந்து பயணி ஒருவரிடமிருந்து ரூ. 4 லட்சம் மதிப்புள்ளபொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.

கோவையிலிருந்து, பெங்களூர் நோக்கி செல்லும் குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம்செய்து கொண்டிருந்தார் நகைக் கடைக்கார் ஒருவர்.

ரயில் ஈரோடு நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்த போது ரயிலுக்குள் புகுந்தகொள்ளையன் ஒருவன் அவரிடமிருந்த பையை பறித்தான்.

அதிலிருந்த 80 சவரன் தங்க நகைகள், ரூ. 1 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டுபையை வெளியே தூக்கி எறிந்து விட்டு தப்பி ஓடி விட்டான்

கொள்ளையன் தப்பி ஓடியவுடன் தன் உடைமைகளை பறி கொடுத்த பயணி ரயிலின்அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார்.

தனது உடைமைகள் பறி போனதை பற்றி போலீசாரிடம் கூறினார்.

ஆனால் கொள்ளையன் அதற்குள் இருளில் மாயமாக மறைந்து விட்டான்.இதுகுறித்துபோலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற