மதுரையில் வேன், லாரி மோதல் - 2 பேர் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை

விருதுநகர் அருகே வேனும், லாரியும் நேருக்குநேர் மோதியதில், வேனில் சென்ற 2 பேர் தூக்கி வீசப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

பாளையங்கோட்டையில் விபத்தில் சிக்கி சிகிச்சைபெற்றுவரும் தங்கள் உறவினரைப் பார்க்கச் சென்றுவிட்டு ஒரு வேனில் சிலர்வந்துகொண்டிருந்தனர்.

அப்போது அந்த வேன், தீப்பெட்டிகளை ஏற்றிக் கொண்டு எதிரே வந்துகொண்டிருந்த லாரி மீது நேருக்குநேர் மோதியது. இந்தமோதலில் ஏற்பட்ட அதிர்வில் வேனில் பயணம் செய்த 3 பேர் தூக்கி கீழே வீசப்பட்டனர். இதில் ஒருவர் அதே இடத்தில்துடிதுடித்து இறந்தார். மற்றொருவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.மற்றொருவர் படுகாயத்துடன் சிகிச்சைபெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற