4 மாதங்கள் வேஸ்ட்- சிதம்பரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயலலிதாவை முதல்வராக்கியதன் மூலம் நான்கு மாதங்களை தமிழக மக்கள் வேஸ்ட்செய்து விட்டார்கள் என்று காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் பொதுச் செயலாளர்ப.சிதம்பரம் கூறினார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சுப்ரீம் கோர்ட், ஜெயலலிதாமுதல்வராக பதவியேற்றது செல்லாது என்று உறுதியான தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஜனநாயக மரபுகளைக் கடைப்பிடித்து தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் நல்ல, சிறந்ததலைவர்களைத் தந்த தமிழக மக்கள் இதுபோன்ற தீர்ப்பு ஏன் வந்தது என்பதைகொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சென்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதற்கு காரணமாக உள்ள அம்சங்கள்:

நல்லாட்சியை யார் கொடுப்பார்கள் என்பது குறித்தும், நல்லாட்சி குறித்தும் தமிழகவாக்காளர்கள் கடந்த தேர்தலின்போது கவலைப்படவில்லை.

தேவையில்லாத, அர்த்தமில்லாத அனுதாபம், அரசியல் கோட்பாடுகள்,கொள்கைகளை மறந்து சில கட்சிகள் செய்து கொண்ட ஒப்பந்தம் போன்றவைதான்அதிமுக பெற்ற மாபெரும் வெற்றிக்குக் காரணம்.

தேர்தலில் நிற்கவே முடியாத ஒருவரை முதல்வர் பதவியில் அமர்த்தியதன் மூலம் 4மாதங்களை வீணடித்து விட்டோம்.

வேஸ்ட் செய்துள்ளோம். இனிமேலாவது அதிமுக எம்.எல்.ஏக்கள் அரசியல்சட்டத்திற்குட்பட்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற