இந்தியா, பாகிஸ்தான் மீதான பொருளாதாரத் தடை நீக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

இந்தியா மற்றும் பாகிஸ்தான் மீது அமெரிக்கா விதித்திருந்த பொருளாதாரத் தடையை நீக்கியது.

கடந்த 1998ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி இந்தியா போக்ரானில் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்தது. இந்த செய்தியறிந்த உடனே பாகிஸ்தானும் தன் பங்கிற்கு, அணுகுண்டு சோதனை செய்ததாக அறிவித்தது. முன்னதாக இந்த 2 நாடுகளம் அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவந்தது.

இந்நிலையில் அமெரிக்கா இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிப்பதாக அறிவித்தது. இதையடுத்து 2 நாடுகளுக்கிடையில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டது. இதனால் இந்தியாவின் அந்நியச் செலாவணியில் தொய்வு ஏற்பட்டது.

இதேபோல பாகிஸ்தானுக்கும் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதால் அந்நாட்டின் பொருளாதாரம் பெருமளவுபாதிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த ஆண்டு அமெரிக்கவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் இந்தியாவிற்கு வந்தார். இதனால் இந்திய -அமெரிக்க உறவு மேம்பட்டது.

தற்போது தீவிரவாதத்திற்கு எதிராக அமெரிக்காவுடன், இந்தியா இணைந்து செயல்பட விரும்புவதாகத் தெரிவித்தது. மேலும் 2 ஜனநாயக நாடுகளும் தீவிரவாதத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகள் என்பதால், இந்தியா மீதுஅமெரிக்காவுக்கு இருந்த வெறுப்பு தணிந்தது.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஆப்கான் போரில் பாகிஸ்தானின் தேவை பல வழிகளில் உள்ளது. தாக்குதல் களம், மற்றும்மதப்போர் என்ற கருத்தை மறைக்க என்று பாகிஸ்தானின் அவசியம் அமெரிக்காவிற்கு இப்போது அதிகரித்துள்ளது.

இதையடுத்து இந்த 2 நாடுகள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் புஷ் அறிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற