அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது தலிபன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காபூல்:

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் உளவு விமானம் ஒன்றை மீண்டும் தலிபன் படைகள் சுட்டு வீழ்த்தியதாக தலிபன்கள் கூறியுள்ளனர்.

சனிக்கிழமை அமெரிக்காவின் உளவு விமானம் ஒன்றை தலிபன படை வீரர்கள் சுட்டுவீழ்த்தியதாக தலிபன்கள் கூறினர். ஆனால் அது அமெரிக்க விமானம் அல்ல என்று அமெரிக்கா தெரிவித்தது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் உளவு விமானத்ததை சுட்டு வீழ்த்தியதாக தலிபன்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து தலிபனின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனத்தின் தலைவரான அப்துல் ஹாணன் ஹிமட் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஆப்கானின் தென் பகுதி மகாணமான சமன்கனின் தலைநகர் அய்பக்கிற்கு சில கிலோமீட்டர் தொலைவில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க உளவு விமானத்தை தலிபன் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

விமானம் விழுந்த இடத்திற்கு எங்கள் தொழில்நுட்ப பிரிவு வீரர்கள் சென்றுள்ளனர் என்றார்.

இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ரம்ஸ்பீல்ட் கூறுகையில், அமெரிக்காவின் உளவு விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விழுந்து விட்டது. அதை தலிபன் படை வீரர்ரகள் சுட்டு வீழ்த்தினார்களா என்ற தெரியாதுஎன்றார்.

இதனால் தலிபன் படை வீரர்கள் சுட்டுவீழ்திதயதாக கூறப்படும் விமானம் அமெரிக்க உளவு விமானம்தான் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற