"என்றும் முதல்வர் அம்மா அம்மா, அதை எதிர்ப்பவன் எல்லாம் சும்மா சும்மா" - அமைச்சர் பொன்னையன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் அதிமுகவினர் நடத்திய போராட்டத்தின்போது நிதியமைச்சர் பொன்னையன் அதிமுகதொண்டர்களைப் போல அதிரடியாக கோஷமிட்டு அசத்தினார்.

வாஜ்பாய் மற்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து நடந்த இந்தப் போராட்டத்தின்போது, பொன்னையன்தலைமையில் அதிமுக தொண்டர்கள் மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவன் முன்புபோராட்டம் நடத்தினர்.

அப்போது, திறந்த வேனில் நின்று கொண்டிருந்த பொன்னையன் மைக்கை வாங்கி கோஷமிட ஆரம்பித்தார்."என்றும் முதல்வர் அம்மா அம்மா, அதை எதிர்ப்பவன் எல்லாம் சும்மா சும்மா" என்பது உள்ளிட்ட பலகோஷங்களை நரம்பு புடைக்க வாசித்தார்.

இதைக் கேட்ட தொண்டர்கள் உற்சாகமடைந்து திரும்பக் கூறத் தொடங்கினர். சாலையில் நின்று இந்தப்போராட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பொது ஜனங்கள் அமைச்சரே அசத்தலாக கோஷமிடுவதைஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற