சென்னையில் லேசான நிலநடுக்கம் - மக்கள் பீதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் பாண்டிச்சேரியிலும் ஏற்பட்ட லேசானநிலநடுக்கத்தினால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று (செவ்ாய்க்கிழமை) இரவு 8.20 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பெரியசேதம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் சென்னை வாசிகளுக்கு நிலநடுக்கம் புதிய அனுபவம் என்பதால்அனைவரும் அடுக்கு மாடிக்குடியிருப்புகள், அலுவலகங்கள் மற்றும் வீடுகளைவிட்டு வெளியே வந்துநின்றுகொண்டிருக்கிறார்கள்.

சென்னையின் மையப்பகுதிகளான தேனாம்பேட்டை, மயிலாப்பூர், மந்தவெளி, வேளச்சேரி போன்ற இடங்களில்இந்த நிலநடுக்கத்தை மக்கள் உணர்ந்துள்ளனர்.

மேலும் சென்னையின் புறநகர் பகுதிகளான போரூர், விருகம்பாக்கம், வில்லிவாக்கம், அம்பத்தூர், அண்ணாநகர்,கொரட்டூர், நங்கநல்லூர் போன்ற இடங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நடுக்கத்தின் போது அடுக்குமாடிக் கட்டிடங்கள் ஆடின. சில வீடுகளில் லேசான கீறல்களும் ஏற்பட்டுள்ளன.வீடுகளில் உட்கார்ந்திருந்தவர்கள் திடீரென கட்டில்கள் "தடதட"வென்று ஆடியதாலும், பாத்திரங்கள்"பொலபொல"வென சரிந்து விழுந்தததாலும் பீதியடைந்து தலைதெறிக்க ஓடியுள்ளனர்.

மேலும் அடையாறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டதாகவும், தொலைபேசி மற்றும் செல்போன்கள்வேலைசெய்யவில்லை என்றம் கூறப்படுகிறது.

இந்த நடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோளில் எவ்வளவு பதிவாகியுள்ளது என்று இன்னும்தகவல் வரவில்லை.

இருப்பினும் இந்த நடுக்கம் சில விநாடிகள் நீடித்தது என்று உணர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

சென்னையைத் தவிர திருவண்ணாமலையில் மனலூர்பேட்டையில் இதுபோல நில நடுக்கம் ஏற்பட்டு, அது சிலவிநாடிகள் நீடித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றுசெய்திகள் தெரிவிக்கின்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற