இரண்டு முறை வந்த நில நடுக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை நகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 10.37 மணியளவில் இரண்டாவதுமுறையாக நில நடுக்கம் ஏற்பட்டது என்று வானிலை நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி கடும் பூகம்பம் ஏற்பட்டது. இதில்பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த கோர சம்பவத்தை இன்னமும் மக்கள்மறக்கவில்லை.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 8.27 மணிக்கு சென்னையில் ஏற்பட்ட நில நடுக்கம்சென்னை மக்களை நடுங்க வைத்துள்ளது. குஜராத் போல் இங்கும் அழிவுஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சி நடுங்கிய மக்கள் வீட்டை விட்டு தெருவில் வந்து நின்றுகொண்டனர். இரவு பொழுது முழுவதையும் வீதியியே கழித்தனர்.

இரவு 10.37 மணியளவில் இரண்டாவது நில நடுக்கமும் ஏற்பட்டுள்ளது. ஆனால், இது மிகலேசான அளவில் இருந்ததால் கருவிகளில் மட்டுமே பதிவாகியுள்ளது. பெரும்பாலானமக்களால் உணரப்படவில்லை என்று வானிலை நிலைய துணை இயக்குனர் ஜெனரல் ஏ.கே.பட்நாகர் கூறியுள்ளார்.

இது ரிக்டர் அளவு கோலில் 3.5 என்ற அளவில் பதிவாகியிருந்தது என்று கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற