காவிரிப் பிரச்சனை: சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்- பன்னீர்செல்வம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

காவிரிப் பிரச்சனையில் தேவைப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம் என முதல்வர்பன்னீர்செல்வம் கூறினார்.

கோட்டையில் புதன்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

காவிர் ஆணையக் கூட்டத்தைக் உடனே கூட்டக் கோரி பிரதமர் வாஜ்பாய்க்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.அவரது பதிலுக்காகக் காத்திருக்கிறோம்.

ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் முன்பே அவர் பதவியில்நீடிக்க முடியாது எனக் கூறி திமுகவினர் பேசி வந்தனர். இதனைக் கண்டித்துத் தான் அதிமுகவினர் போராட்டம்நடத்தினர். இதில் உருவப் பொம்மை எரிக்கிறோம் என வீண் பிரச்சனையைக் கிளப்புகிறார்கள்.

நில அதிர்ச்சியில் உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கும் உரிய நிவாரண உதவி வழங்கப்படும்.

இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற