நடு ரோட்டில் படுத்துத் தூங்கிய மக்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட நில அதிர்வை அடுத்து, நகர மக்கள் அனைவரும் சாலைகளில்நடுவே வந்து, பாய் விரித்து உறங்கினர்.

செவ்வாய் இரவு 8.30 மணிக்கு ஏற்பட்ட இந்த நில அதிர்வு காரணமாக, சென்னை நகர மக்கள் பெரும்பீதிக்குள்ளாயினர். வீட்டுக்குள்ளே அத்தனையையும் போட்டது போட்டபடி, தெருவுக்கு ஓடி வந்தனர்.

அடுத்தடுத்து 2 முறை நில அதிர்வு ஏற்பட்டதால், மீண்டும் நில அதிர்வு ஏற்படும் என்ற பீதியில், மக்கள் தங்கள்வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் தவித்தனர்.

நடு ரோட்டுக்கு ஓடி வந்த மக்களில் சிலர், ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக நின்று பிரார்த்தனை செய்யவும்ஆரம்பித்தனர்.

இரவு சாப்பாடு நேரத்தில் நில அதிர்வு ஏற்பட்டதால், பெரும்பாலான மக்கள் பாத்திரம், அடுப்பு சகிதம் நடுரோட்டிலேயே அமர்ந்து சமைக்க ஆரம்பித்தனர்.

நில அதிர்வு ஏற்படுத்திய பீதியில், பலர் உறங்காமல் அரட்டை அடித்துக் கொண்டும், நண்பர்களுடன் அங்குமிங்கும்உலாவியபடியும் இருந்தனர். தூக்கம் வந்தவர்களும், நடு ரோட்டிலேயே பாயை விரித்து, தூங்கஆரம்பித்தனர்.

பொதுவாக, இரவு 10 மணிக்கெல்லாம் வெறிச்சோட ஆரம்பிக்கும் சென்னையின் முக்கிய சாலைகள் எல்லாம், நிலஅதிர்வு பீதியின் காரணமாக, பொதுமக்களால் நிரம்பி வழிந்தன.

சென்னை அரசுப் பொது மருத்துவமனையிலும், நோயாளிகள் பதறி அடித்துக் கொண்டு மருத்துவமனையை விட்டுவெளியே ஓடி வந்தனர். பெரும்பாலான நோயாளிகள் மருத்துவமனையின் வெளி வராண்டாவிலேயே படுத்து உறங்கஆரம்பித்தனர்.

இரவு முழுவதும் மக்கள் கூட்டம் கூட்டமாக நடு ரோடுகளில் நின்று கொண்டிருந்தனர். இதனால் சென்னை முழுவதும்புதன்கிழமை அதிகாலை வரை பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற