சென்னை நில அதிர்வின் ரிக்டர் அளவு 5.6

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட நில அதிர்வின் அளவு ரிக்டர் அளவுகோளில் 5.6 ஆகப்பதிவாகிஇருந்தது.

குஜராத்தில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட பூகம்பத்தின் அளவு 7.6 ஆகும்.

சென்னையில் நேற்று இரவு ஏற்பட்டதைப் போல முன் எப்போதும் இந்த அளவு நிலஅதிர்வு ஏற்பட்டதில்லை என்றுநிபுணர்கள் கூறுகிறார்கள்.

பாண்டிச்சேரிக்கு கிழக்கே கடலுக்குள் 50 கி.மீ தொலைவில் இந்த அதிர்வு மையம் கொண்டிருந்ததாகவும் அவர்கள்தெரிவித்தனர். இதற்கு முன்பு 1966ம் ஆண்டு இதே பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வின் அளவு 5.2 ஆகும்.

நில அதிர்வு ஏற்படும்போது நாய்கள் ஓலமிட்டதாகவும், பறவைகள் கூக்குரல் எழுப்பி மரக்கிளைகளைவிட்டுபறந்துசென்றதாகவும் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

மாடுகளும் நிலஅதிர்வை உணர்ந்து பரிதாபமாகக் கத்தியதாகக் கூறப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற