மணல் திருடர்கள் ஜாக்கிரதை.. ராமநாதபுரம் கலெக்டர் எச்சரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்:

ராமநாதபுரத்தில் மணல் திருடர்கள் பிடிபட்டால் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று அம்மாவட்டஆட்சியர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு மணல் எடுப்பதற்கான ஒப்பந்தங்கள் மூலம் ரூ. 1 கோடி அளவுக்குவருவாய் ஈட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது அந்த இலக்கில் இதுவரை ரூ.45 லட்சம் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் மணல் திருடிபிடிபட்டவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையான ரூ.10 லட்சமும் அடங்கும்.

சட்டவிரோதமாக ஆற்றுமணலைத் திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அபராதத் தொகைமட்டுமல்லாது சிறைத்தண்டனையும் அவர்களுக்குக் கிடைக்கும் என்றார் அவர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற