மேயர் தேர்தலில் ஆர்வம் இல்லை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மேயர் தேர்தலில் போட்டியிட இதுவரை 3 பேர் மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட கிராமப்புறங்களில் மட்டுமே மிகுந்த ஆர்வம் காணப்படுகிறது. நகர்ப்புறங்களில் பெரியஅளவு ஆதரவு காணப்படவில்லை. மக்களிடையேயும் ஆர்வம் அதிகம் இல்லை.

சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான வேட்பு மனுத்தாக்கல் துவங்கி 4 நாட்களாகியும் இதுவரை 3 பேர் மட்டுமே வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். கவுன்சிலர் தேர்தலுக்கு 25 பேர் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அதிமுக சார்பில் பாலகங்காவும், சுயேச்சைகளாக தலித் குடிமகன் என்பவரும், முன்னாள் திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தலைவர் கே.ராஜனும் மேயர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

திமுக சார்பில் மேயர் பதவிக்கான வேட்பாளர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. தற்போதைய மேயர் ஸ்டாலின்மீண்டும் போட்டியிடவில்லை என்று கூறப்படுகிறது. இந்தக் கட்சியின் வேட்பாளர் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படுவார் என்றுதிமுக தலைவர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற