திருத்தணி:
சென்னையில் நில அதிர்ச்சி ஏற்பட்டபோது, திருத்தணியில் உள்ள துணைச் சிறையின் சுவர்களில் விழுந்தவிரிசல்களைக் கண்டு, கைதிகள் பயந்து போயினர்.
சென்னைக்கு அருகே உள்ள திருத்தணியில் புகழ் பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த ஊரில் உள்ள ஒருமலையில், நில அதிர்ச்சி ஏற்பட்ட செவ்வாய்க்கிழமை இரவு சிறு சிறு பாறைகள், கற்கள் உருண்டு விழுந்துள்ளன.
ஆனால் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
அதேபோல அங்குள்ள துணைச் சிறையில் உள்ள சுவர்களிலும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கைதிகள்பயந்துள்ளனர். உடனடியாக அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு சிறை அதிகாரிகள் இடம் மாற்றியுள்ளனர்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!