காங்கிரஸ்-ப.சிதம்பரம்-கண்ணப்பன் புதிய கூட்டணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

காங்கிரஸ் தலைமையிலான மூன்றாவது அணியில் ப.சிதம்பரத்தின் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை, கிருஷ்ணசாமியின் புதியதமிழகம், ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி ஆகியவை இணைந்துள்ளன.

வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைத்து தனியே போட்டியிட காங்கிரஸ் முடிவுசெய்தது. இதற்காக சிறிய கட்சிகளுடன் பேச்சு நடத்தி வந்தது.

இந்தப் பேச்சுவார்த்தைகள் வெள்ளிக்கிழமை முடிவடைந்தன. பேச்சுவார்த்தைகளையடுத்து காங்கிரஸ் அணியில் ப.சிதம்பரம்இணைந்தார். அதே போல முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், புதிய தமிழகம் கட்சி ஆகியயோரும் காங்கிரஸ் கூட்டணியில்இணைந்தன.

வெள்ளிக்கிழமை மாலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் ரமேஷ் சென்னிதலா இதனை நிருபர்களிடம்தெரிவித்தார். அப்போது ப.சிதம்பரம், மாநில காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம்,புதிய தமிழகம் சார்பில் பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்தக் கட்சிகள் மாநிலம் முழுவதும் மூன்றாவது அணியாக போட்டியிடும். இந்தக் கூட்டணிக்கு பெரும் வெற்றி வாய்ப்புஇருப்பதாக ரமேஷ் சென்னிதலா கூறினார்.

ப.சிதம்பரம் கூறுகையில், எங்கள் கூட்டணியின் அணுகுமுறை திமுக, அதிமுக கூட்டணிகளின் அணுகுமுறைகளைவிட மிகவித்தியாசமாக இருக்கும் என்றார்.

தமிழகத்தையே திருத்தப் போவதாக மிக உயர்ந்த கொள்கைகள் குறித்து பேசி வரும் ப.சிதம்பரம் ஜாதிக் கட்சியான புதிய நீதிக்கட்சியுடனும், ஊழல் புகழ் கண்ணப்பன் உடனும் கூட்டணி சேர்ந்திருப்பது அவரது கட்சித் தொண்டர்களையே அதிருப்திஅடையச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கருணாநிதி பேட்டி:

காங்கிரஸ தலைமையில் 3வது அணி உருவானது குறித்து திமுக தலைவர் கருணாநிதி கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழகத்தில் 3வது அணி அமைந்துவிட்டதால் திமுக கூட்டணியின் வெற்றி பாதிக்கப்படாது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன்உறவு தொடர்கிறது. ஆனால், கூட்டணி இல்லை என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற