உயிரிழந்த அதிமுக தொண்டர்களின் குடும்பங்களுக்கு ஜெ. நிதியுதவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தனது பதவியிழப்பு செய்தியால் அதிர்ச்சியடைந்து தீக்குளித்து, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த 17அதிகவினரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என்று முன்னாள் முதல்வரும், அதிமுகபொதுச் செயலாளருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் அதிர்ச்சியடைந்த அதிமுக தொண்டர்கள் தீக்குளித்தும், மாரடைப்பு ஏற்பட்டும்உயிரிழந்துள்ளனர். இந்த தகவலைக் கேட்டு நான் வேதனையடைந்துள்ளேன்.

அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடன் பிறப்புகளின்மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.50,000 நிதி கழகத்திலிருந்துவழங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இனியும் இதுபோன்ற எனது மனதை வருத்தும் செயல்களில் உடன்பிறப்புகள் ஈடுபடக் கூடாது என்று கண்டிப்புடன்கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற