கொடைரோடு அருகே பஸ்கள் மோதல்: 7 பேர் பலி- 30 பேர் படுகாயம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்:

கொடைரோடு அருகே இன்று (சனிக்கிழமை) இரு பஸ்கள் நேருக்கு நேர் மிக பயங்கரமாக மோதிக் கொண்டதில் 7 பேர் அந்தஇடத்திலேயே இறந்தனர்.

30 பேர் படுகாயமடைந்தனர். இறந்தவர்களில் 2 பேர் பெண்கள்.

கொடைரோடு அருகே முருகன்பட்டி என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது.

ஒரு பேருந்து திருச்செந்தூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இன்னொரு பேருந்து திண்டுக்கல்லில் இருந்துநிலக்கோட்டைக்குச் சென்று கொண்டிருந்தது.

இரு பஸ்களும் மிக வேகமாக சென்று கொண்டிருந்தன. முருகன்பட்டி அருகே வந்தபோது இரு பஸ்களும் நேருக்கு நேர் மிகபயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் இரு பஸ்களின் டிரைவர்களும் உடல் நசுங்கி அங்கேயே இறந்தனர்.

சாலையில் நடந்து சென்ற 16 வயது சிறுவனும் உயிரிழந்தான். இரு பஸ்களிலும் பயணம் செய்த பலரும் வெளியே தூக்கிஎறியப்பட்டனர். பஸ்கள் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து கொண்டன. டிரைவர்கள் உள்பட 6 பேர் நசுங்கி இறந்தனர்.

காயமடைந்த அனைவரையும் பொது மக்கள் மீட்டனர். அவர்கள் மதுரை மற்றும் திண்டுக்கல் மருத்துவனைகளில்சேர்க்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் பலரது நிலைமை மிக மோசமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற