சிறுத்தை அடித்த ஆட்டைச் சமைத்த எஸ்டேட் தொழிலாளிக்கு அபராதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

குன்னூர்:

குன்னூர் அருகே சிறுத்தை அடித்துக் கொன்ற ஆட்டை சமைக்க முயன்றவரை வனத்துறையினர் பிடித்து, அவருக்குஅபராதம் விதித்தனர்.

குன்னூர் அருகே நீலகிரி மலைப்பகுதியில் உள்ள காட்டில் பொன்கார்ம் எஸ்டேட் என்ற இடத்தில் சிறுத்தை ஒன்றுமலை ஆட்டைக் அடித்துக் கொன்றது. பிறகு சிறுத்தை ஆட்டின் ஈரல் மற்றும் சில பகுதிகளைத் தின்றுவிட்டு,பெரும்பகுதியை விட்டுவிட்டுச் சென்றுவிட்டது.

இதையறிந்த சிலர் வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். ஆனால் வனத்துறையினர் சம்பவ இடத்துக்குவரும்முன்பு ஆட்டை யாரோ எடுத்துச் சென்றுவிட்டனர்.

அதிர்ந்துபோன வனத்துறையினர், ஆட்டை எடுத்துச் சென்றவரை கண்டுபிடிக்க தீவிர விசாரணையில் இறங்கினர்.முடிவில் பொன்கார்ம் எஸ்டேட்டைச் சேர்ந்த மூக்கையன் என்பவர்தான் ஆட்டை எடுத்துச் சென்றுள்ளார் என்றுகண்டுபிடித்தனர்.

பிறகு மூக்கையனின் இருப்பிடத்தை அடைந்த வனத்துறையினர், மூக்கையன் ஆட்டைக் கழுவி சுத்தம் செய்துசமைக்க தயாராக இருந்தபோது அவரைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.

வனத்துறையினரின் அனுமதி இல்லாமல் ஆட்டைத் திருடியதற்காக மூக்கையனுக்கு, ரூ.6 ஆயிரம் அபராதம்விதித்தனர்.

சிறுத்தை தாக்கியதால் ஆட்டில் விஷம் ஏறியிருக்கும் என்பதால் அதை யாராவது சாப்பிட்டுருந்தாலும் அவர்கள்உயிருக்கே ஆபத்தாகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற