நான் அதிமுக தொண்டரா? - சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆவேசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

"நான் அரசு அதிகாரிதான் அதிமுகவுக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை" என்று சென்னை மாநகராட்சிகமிஷனர் ஆச்சார்யலு கூறினார்.

சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வேட்பு மனுதாக்கல்செய்தார்.

அப்போது கமிஷனர் அறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் மாட்டப்பட்டிருந்ததைப் பார்த்து,திமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அத்துடன், கமிஷனரையும் கடுமையாக விமர்சித்து கோஷம்எழுப்பினார்கள்.

இதுகுறித்து நிருபர்கள் ஆச்சார்யலுவிடம் கேட்டதற்கு அவர் பதிலளித்துக் கூறியதாவது:

சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட, இதுவரை 7 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். ஸ்டாலின் வேட்புமனுதாக்கல் செய்யும் போது சிலர் என்னை விமர்சித்தார்கள்.

நான் அதைப்பற்றி கவலைப்படப் போவதில்லை. நாங்கள் வேட்பு மனுதாக்கல் செய்ய வருபவரை மட்டும்தான்கவனிக்கிறோம்.

என் அறையில் முன்னாள் முதல்வர் என்ற முறையில்தான் ஜெயலலிதாவின் படம் உள்ளது. ஆனால் மற்றவர்கள்அறையில் சம்பந்தமில்லாதவர்கள் படங்கள் எல்லாம் உள்ளன.

மேலும் நான் ஒரு அரசு அதிகாரி. ஜெயலலிதா முன்னாள் முதல்வர் அவ்வளவுதான். எனக்கும் அதிமுகவிற்கும் எந்தசம்பந்தமமும் இல்லை.

இவ்வாறு ஆச்சார்யலு கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற