உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை நிறைவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (திங்கள்கிழமை)முடிவடைகிறது.

அடுத்த மாதம் 16 மற்றும் 18ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. கடந்த 24ம்தேதி தொடங்கிய இதற்கான வேட்புமனு தாக்கல், வரும் திங்கள்கிழமை முடிவடைகிறது.

இந்த தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கூட்டணி தவிர காங்கிரஸ் தலைமையிலான 10 கட்சிகளைக்கொண்ட புதிய கூட்டணியும் தேர்தல் களத்தில் குதித்துள்ளது.

அனைத்து கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை முடித்தவிட்ட நிலையில்வேட்பு மனு தாக்கலும் சூடுபிடித்துள்ளது. நேற்று வரை 2 லட்சத்து 86 ஆயிரத்து 387 பேர் வேட்புமனு தாக்கல்செய்துள்ளனர்.

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாதலால், திங்கள்கிழமை மிக அதிக அளவில் வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் 1 லட்சத்து 31 ஆயிரத்து 292 உள்ளாட்சி மன்ற பதவிகளுக்கான தேர்கல் நடைபெறுகிறது. இதில் 6 மேயர்பதவிகளும் அடங்கும்.

வேட்பு மனு தாக்கல் 1ம் தேதி (திங்கள்கிழமை) முடிவடைகிறது. வேட்புமனு பரிசீலனை 3ம் தேதி (புதன்கிழமை)நடைபெறும். வேட்புமனுக்களை வாபஸ் பெற 5ம் தேதி (வெள்ளிக்கிழமை) கடைசி நாளாகும்.

தேர்தல் 16 மற்றும் 18ம் தேதிகளில் நடக்கும். வாக்கு எண்ணிக்கை 21ம் தேதி தொடங்கும். புதிய உறுப்பினர்கள்25ம் தேதிக்குள் பதவி ஏற்பார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற