டான்சி வழக்கு - ஜெ. அப்பீல் மனு மீதான விசாரணை நாளை தொடக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த டான்சி அப்பீல் மனு மீதான விசாரணை நாளை (திங்கள்கிழமை) சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்குகிறது.

ஜெயலலிதா முதல் முதலாக முதல்வராக பதவி வகித்த போது அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தை விலைகுறைவாக வாங்கியதால் அரசுக்கு ரூ 3 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக முந்தைய திமுக அரசு வழக்கு தொடர்ந்தது.மேலும் கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டலுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாகவும் ஜெயலலிதா மீதுவழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் 2 ஆண்டுகடுங்காவல் சிறை தண்டனையும், டான்சி நில வழக்கில் 3 ஆண்டு கடுங்காலவல் சிறை தண்டனை வழங்கியும்உத்தரவிட்டது.

இதையடுத்து தனக்கு தனி நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்யுமாறு கோரி ஜெயலலிதா சென்னைஉயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பாலசுப்ரமணியம் முன் ஆகஸ்டு மாதம் 27ம் தேதி தொடங்கி நடைபெற்றுவந்தது

இந்நிலையில் அரசு சிறப்பு வழக்கறிஞர் வெங்கடபதி வழக்கின் ஆவணங்கள் தனக்கு முழுமையாகவழங்கப்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை வேறு உயர் நீதிமன்றத்துக்குமாற்ற வேண்டும் என்றும் அவர் தன் மனுவில் கேட்டுக் கொணடிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதாவின் அப்பீல் மனு மீதான விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை வெங்கடபதிக்கு உடனே வழங்க வேண்டும் என்றும்சென்னை உயர் நீதிமன்ற அலுவலகத்திற்கு உத்தரவு பிறப்பித்தது.

ஜெயலிலதாவின் அப்பீல் மனுக்கள்மீதான விசாரணையை விசாரணை செய்ய புதிய நீதிபதி நியமிக்கப்படுவார்என்றும், விசாரணை அக்டோபர் 1ம் தேதிக்கு முன் துவங்கப்படக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.கே.ஜெயின் கர்நாடக உயர் நீதிமன்றநீதிபதியாக மாற்றப்ட்டார். இதையடுத்து ஆந்திர மாநிலத்திலிருந்து நீதிபதி சுபாஷன் ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

டான்சி அப்பீல் மனுக்கள் மீதான விசாரணையை நடத்த, நீதிபதி தினகரை சுபாஷன் ரெட்டி நியமித்தார்.

ஜெயலலிதா அப்பீல் மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி தினகர் முன் திங்கள்கிழமைதொடங்குகிறது. இந்த வழக்கு விசாரணை தினமும் தொடர்ந்து நடைபெறும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற