காஷ்மீர் சட்டசபை மீது தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல்: 26 பேர் பலி- 40 பேர் காயம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காஷ்மீர்:

ஸ்ரீநகரில் சட்டசபை மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரைக் கொண்டு தீவிரவாதிகள் மோதினர். இதில் சட்டசபைக்கட்டடத்தின் ஒரு பகுதி வெடித்துச் சிதறியது. இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் பலர் ராணுவத்தினர். 40 பேர்காயமடைந்தனர்.

சட்டசபைக் கட்டத்துக்குள் தற்கொலைப் படையைச் சேர்ந்த சில தீவிரவாதிகள் புகுந்துள்ளனர். இதையடுத்து அந்தக் கட்டடத்தைராணுவத்தினர் சுற்றி வளைத்துள்ளனர்.

இந்தத் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. பிற்பகல் 2.20 மணிக்குத்தொடங்கிய இந்த துப்பாக்கிச் சண்டை பல மணி நேரமாக தொடர்ந்து நடந்து வருகிறது. கட்டடத்துக்குள் எத்தனை தீவிரவாதிகள்உள்ளனர் என்று தெரியவில்லை.

இன்று (திங்கள்கிழமை) பகல் 2.15 மணிக்கு வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட டாடா சுமோ கார் சட்டசபையின் வெளிக் கதவின் மீதுமோதியது. மிக பலத்த சத்தத்துடன் அந்த கார் வெடித்துச் சிதறியது. தற்கொலைப் படையைச் சேர்ந்த தீவிரவாதி இந்த காரைகொண்டு வந்து மோதினான். இதில் அவனும் வெடித்துச் சிதறினான்.

கார் வெடித்துச் சிதறியதில் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் உள்பட 26 பேர் அந்த இடத்திலேயே உடல்சிதறி இறந்தனர். 40 பேர் படுகாயமடைந்தனர்.

முதலில் 12 பேர் இறந்ததாக தகவல் வந்தது. ஆனால், மீட்பு பணிகளின்போது தான் இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகஇருப்பது தெரியவந்தது. தொடர்ந்து இறந்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போவது அதிர்ச்சி அளித்துள்ளது.

இதையடுத்து ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்தி பல தீவிரவாதிகள் சட்டசபை கட்டடத்துக்குள் பின் வாயில் வழியாகநுழைந்தனர்.

சட்டசபைக் கூட்டம் முடிந்து முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வெளியேறிய 10வது நிமிடத்தில் இந்த கார் குண்டுவெடித்தது. அதிர்ஷ்டவசமாக முதல்வரோ அமைச்சர்களோ அந்த இடத்தில் இல்லை. ஆனால், சட்டசபை சபாநயகர் அப்துல் அகத்வக்கீல் சட்டசபைக்குள் சிக்கியிருப்பதாகத் தெரிகிறது.

முன்னதாக தொலைத்தொடர்புத்துறைக்கு சொந்தமான இந்த டாடா சுமோவை தீவிரவாதிகள் கடத்தினர். அதன் டிரைவரைக்கட்டிப் போட்டுவிட்டு ராணுவ உடையை அணிந்து கொண்டனர். பின்னர் இதில் குண்டுகளை நிரப்பிக் கொண்டு அதைசட்டசபைக்கு ஓட்டி வந்தனர். வந்தது அரசு கார் என்பதால் அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் அதைதடுக்கவில்லை. ஆனால், வளாகத்தின் அருகே வந்தவுடன் சோதனைக்காக நிறுத்தினர். ஆனால், அந்த கார் நிற்கவில்லை. மிகவேகமாக அதை ஓட்டிய தீவிரவாதி அதைக் கட்டடத்தின் மீது மோதினான். இதில் அவனும் வெடித்துச் சிதறினான்.

தீவிரவாதிகளால் கட்டிப்போடப்பட்ட காரின் டிரைவரை பொது மக்கள் மீட்டனர். அவர் தன்னை 3 தீவிரவாதிகள் தாக்கிவிட்டுகாரை எடுத்துச் சென்றதாகக் கூறுகின்றனர்.

மிக பலத்த பாதுகாப்புடன் உள்ள இந்தப் பகுதியில் நடந்துள்ள இத் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயிஸ்-ஏ-முகம்மத் பொறுப்பேற்பு:

ஆப்கானிஸ்தானில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் காஷ்மீரில் தீவிரவாதம் அதிகரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசின் ஆதரவுடனும் பாகிஸ்தானின் ராணுவத்தின் ஆதரவுடனும் தான் காஷ்மீரில் தீவிரவாதிகள்செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெயிஸ்-ஏ-முகம்மத் என்ற தீவிரவாத அமைப்பு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. இந்தஅமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் தான் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை ஆப்கானிஸ்தானுக்குக் கடத்தியவர்கள். இந்தஅமைப்பின் தலைவர் மெளலானா முகம்மத் அஸாரை காஷ்மீர் சிறையிலிருந்து விடுவித்த பின்னர் தான் விமானப் பயணிகளைஇந்த அமைப்பினர் விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிரவாதிகளின் இந்தத் தாக்குதலில் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர், எல்லைப் பாதுகாப்புப்படையினர், போலீசார் ஆகியோர் காயமடைந்தனர்.

முதல்வர் பரூக் அப்துல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாதிக் அலி என்ற எம்.எல்.ஏவும் இதில் காயமடைந்தார்.

இறந்தவர்களில் ஒரு கல்லூரி மாணவியும் அடங்குவார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற