இந்திய ராணுவ கூட்டுப் படைத் தலைவராக பங்கஜ் நியமனம்

Posted By: Super
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்திய ராணுவத்தின் கூட்டுப் படைத் தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் பங்கஜ் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய ராணுவத்தில் இதுவரை 3 படைகளுக்கும் தலைவராக, முப்படைத் தளபதிகளில் ஒருவர் இருந்துவந்தார்.தற்போது அந்தப் பொறுப்பில் கடற்படைத் தளபதி சுஷில் குமார் இருந்து வருகிறார்.

அவருக்கு அடுத்தபடியாக துணைத் தலைவர் பதவி ஒன்று இருக்கிறது. துணை தலைவராக இருப்பவர் தான் 3படைகளின் கூட்டு நடவடிக்கைகளைக் கண்காணிப்பார். இந்தப் பதவிக்கு இராணுவ கூட்டுப்படைத் தலைவர் என்றுபெயர்.

இந்தப் பதவிக்கு முதன்முதலாக லெப்டினன்ட் ஜெனரல் பங்கஜ் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று ராணுவவீரர்கள் நினைவு மண்டபத்தில் (அமர் ஜவான் ஜோதி) மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தியபின்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன்பு மத்திய இராணுவ கமாண்டராகப் பணிபுரிந்து வந்தார்.

இவர் கடந்த 1965ம் ஆண்டு நடந்த இந்திய- பாகிஸ்தான் போரில் பங்கேற்றுச் சிறப்பாகச் செயலாற்றியவர்.மேலும் 1967ம் ஆண்டு நடந்த சீனப் போரிலும் பங்கெடுத்துள்ளார். அப்போது சிக்கிமில் நடந்த சண்டையில் இவர்தனது காலை இழந்து, செயற்கைக் காலில்தான் நடக்கிறார்.

இவர் பரம் விஷிஷ்ட் சேவா மற்றும் அதி விஷிஷ்ட் சேவா போன்ற பதக்கங்களைப் பெற்றவர்.

மேலும் இவர் ராணுவத்தின் பல முக்கிய பதவிகளை வகித்திருக்கிறார். மோ என்ற இடத்தில் உள்ள எந்திரப்படைப்பிரிவுக் கல்லூரியில் கூடுதல் இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.

இவருக்கு அடுத்த பதவியான ராணுவக் கூட்டுப் படைத் துணைத் தலைவர் பதவிக்கு லெப்டினன்ட் ஜெனரல் விஜ்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவரும் ராணுவத்தின் பல முக்கிய பதவிகளை வகித்து சிறப்பாகப் பணியாற்றியவர் ஆவார். இவர் கார்கில் போரில்ஆபரேஷன் விஜய்யில் ராணுவ செயலகத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.

மேலும் இவர் சியர்ரா லியோன் நாட்டில் ஆபரேஷன் குக்ரி என்ற இந்திய ராணுவத்தின் அமைதி காப்புப் படையில்திட்டப்பிரிவில் சிறப்பாகப் பணியாற்றிவர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற