அதிமுக ஒன்றிய செயலாளர் கொலை: ராமநாதபுரத்தில் பதட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்:

அதிமுக ஒன்றிய செயலாளர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து ராமநாதபுரம்மாவட்டம் புனவாசலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

புனவாசல் அதிமுக ஒன்றியச் செயலாளராக இருந்து வந்தவர் கண்ணன். உள்ளாட்சிதேர்தல் பணிகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

இவர் புனவாசல் அருகே உள்ள ஒரு ஊரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக நேற்று(ஞாயிற்றுக்கிழமை) சென்றார். அங்கு அவருக்கும் மாற்று கட்சியினருக்கும் இடையேகடும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

மாலை புனவாசலில் தன் சகாகக்கள் 3 பேருடன் கண்ணன் சென்று கொண்டிருந்போது10 பேர் கொண்ட கும்பல் ஒன்று கண்ணனையும், அவருடன் இருந்தவரையும்சரமாரியாக தாக்கியது. பின் அந்த கும்பல் தப்பி ஓடி விட்டது.

பலத்த காயமடைந்த கண்ணன் உள்ளிட்ட 4 பேரும் உடனடியாக சிகிச்சைக்காகராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கண்ணன்சிகிச்சை பலனின்றி இறந்து போனார். மற்ற மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்த சம்பவத்தையடுத்து புனவாசலிலும் ராமநாதபுரத்திலும் பெரும் பதட்டம் நிலவிவருகிறது. கலவரம் ஏதும் பரவாமல் தடுக்க போலீஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற