ஹெலிகாப்டர் விபத்து: உயிர் தப்பினார் அப்துல்கலாம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்தியாவின் புகழ்பெற்ற ராணுவ விஞ்ஞானியும் மத்திய அரசின் முதன்மை அறிவியல்ஆலோசகருமான விஞ்ஞானி அப்துல்கலாம் ஹெலிகாப்டர் விபத்தில்அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ஜார்கண்ட் மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சிலின் கூட்டம் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) பொகாரோவில் நடந்தது.

இதல் கலந்து கொள்ள விஞ்ஞானி அப்துல்கலாம் மற்றும் மநில அறிவியல் மற்றும்தொழில்நுட்ப அமைச்சர் சம்ரேஷ் சிங் உள்ளிட்ட 5 பேர் ராஞ்யிலிருந்து ஹெலிகாப்டர்மூலம் புறப்பட்டுச் சென்றனர்.

ஹெலிகாப்டர் விண்ணில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென ஹெலிகாப்டரின்இறக்கை உடைந்தது. இதனால் ஹெலிகாப்டரால் பறக்க முடியவில்லை.

விமானி உடனடியாக மிக சாதுர்யமாக ஹெலிகாப்டரை தரையிறக்கினார். இதனால்அப்துல் கலாம் உள்ளிட்ட 5 பேரும் எந்தவிதமான காயமுமின்றி அதிர்ஷ்டவசமாகஉயிர் தப்பினர்.

ஞாயிற்றுக்கிழமை மதியம் ஏற்பட்ட விமான விபத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்ததலைவர் மாதவராவ் சிந்தியா இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற