நெல்லை மேயர் பத-விக்கு 5 பெண்கள் போட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

திருநெல்வேலி மாநகராட்சித் தேர்தலில் தற்போதைய மேயர் உமா மகேஸ்வரிஉள்ளிட்ட 5 முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவி இம்முறையும் பெண்களுக்கேஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதைய மேயர் உமா மகேஸ்வரியே இப்போதும் மேயர்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுகிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் மேயராக இருந்தபோது, கோஷ்டிப் பூசலில் சிக்கிநெல்லை திமுக தவித்தபோதும், மீண்டும் உமாவுக்கே மேயர் தேர்தலில் டிக்கெட்கொடுக்கப்பட்டுள்ளது நெல்லை திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால்ஒரு பிரிவினர் அதிருப்தியுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

உமா மகேஸ்வரி தவிர அதிமுக சார்பில் ஜெயராணியும், மதிமுக சார்பில் சுஜிதாவும்,புதிய தமிழகம் சார்பில் ராஜேஸ்வரியும், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் அமுதாவும்களத்தில் உள்ளனர்.

இருப்பினும் போட்டி ஜெயராணிக்கும், உமா மகேஸ்வரிக்கும் தான் நேரடியாகஉள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற