சிந்தியா மரணத்தில் மர்மம்: சுப்பிரமணியம் சுவாமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மாதவராவ் சிந்தியாவின் மரணத்துக்குக் காரணமான விமான விபத்தில் மர்மம்இருப்பதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.

மாதவராவ் சிந்தியா மற்றும் அவருடன் விபத்தில் இறந்த 8 பேரின் உடல்களும் திங்கள்கிழமை டெல்லிக்குகொண்டு வரப்பட்டன.

சிந்தியாவின் உடலுக்கு பிரதமர் வாஜ்பாய், காங்கிரஸ் தலைவி சோனியா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள்அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மாதவராவ் சிந்தியாநேற்று தனி விமானத்தில் டெல்லியிலிருந்து கான்பூருக்குச் செல்லும்போது நடந்த விபத்தில் பலியானார்.

கான்பூரில் நடைபெறுவதாக இருந்த ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற அவருடன், அதேவிமானத்தில் பயணம் செய்த 4 பத்திரிக்கையாளர்களும், 2 விமானிகளும் இறந்தனர்.

விபத்து நடந்த இடமான மெய்ன்புரியிலிருந்து(உத்திரபிரதேசம்) கார் மூலம் சிந்தியா மற்றும் 7 பேரின் உடல்கள்க்ரா கொண்டுவரப்பட்டன. அவர்களது உடல்களை மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, விஜய் கோயல் மற்றும்உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் ஆகியோர் பெற்றுக் கெண்டனர்.

பிறகு விமானம் மூலம் அவை இன்று காலை டெல்லிக்கு எடுத்து வரப்பட்டன.

விமான நிலையத்தில் சோனியா காந்தி, மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நட்வர்சிங், குலாம் நபி ஆசாத் ஆகியோர் காத்திருந்து உடல்கள் வந்தவுடன் அவற்றை சிந்தியாவின் வீட்டுக்கு எடுத்துச்சென்றனர்.

இன்று சிந்தியாவின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. நாளை காலைஅவரது உடல் காங்கிரஸ் அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். பிறகு அவரது சொந்தஊரான குவாலியருக்கு நாளை மறுநாள் எடுத்துச் செல்லப்பட்டு, தகனம் செய்யப்படும்.

தலைவர்கள் அஞ்சலி:

சிந்தியாவின் உடலுக்கு பிரதமர் வாஜ்பாய், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ஏராளமான அமைச்சர்களும்,அரசியல் பிரமுகர்களும், காங்கிரஸ் தொண்டர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பிரதமர் வாஜ்பாய் தனது இரங்கல் செய்தியில், சிந்தியாவின் திடீர் மறைவு என்னைப் பெரும்அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தக் கொடூர முடிவை என்னால் எளிதில் மறக்க முடியாது என்றார்.

சோனியா காந்தி கூறுகையில், மாதவராவ் சிந்தியாவின் இழப்பு காங்கிரஸ் கட்சிக்கும், தேசத்துக்கும் ஈடுசெய்யமுடியாத இழப்பு என்றார்.

இதேபோல குடியரசுத் தலைவர், முன்னாள் பிரதமர்கள் குஜ்ரால், சந்திரசேகர் மற்றும பல தலைவர்களும் இரங்கள்தெரிவித்துள்ளனர்.

விசாரணை நடத்த சுவாமி கோரிக்கை:

சிந்தியாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், மாதவராவ் சிந்தியாவின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு பெரிய இழப்பாகும். அவரை எனக்கு1970லிருந்தே தெரியும். அவரும் நானும் ஒன்றாகத் தான் ஜன சங்கத்தில் இணைந்தோம். பிறகு ஜன சங்கம்ஜனதாக் கட்சியுடன் இணைக்கப்பட்ட பிறகு, 1977ல் சிந்தியா காங்கிரக்குப் போய்விட்டார்.

தற்போது சிந்தியாவின் மறைவில் மர்மம் இருப்பது போல எனக்குத் தோன்றுகிறது.

காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களான ராஜேஷ் பைலட், ஜிதேந்திர பிரசாத், தற்போது மாதவராவ் சிந்தியாஆகியோர் அடுத்தடுத்து திடீர் மரணமடைந்து வருகின்றனர்.

எனவே இதுகுறித்து மத்திய அரசு விசாரணை நடத்தி ஒரு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற