உள்ளாட்சித் தேர்தல்: தமிழகத்தில் தீவிர பாதுகாப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தலையொட்டி தமிழகமெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என மாநிலத் தேர்தல்ஆணையர் பி.எஸ்.பாண்டியன் கூறினார்.

தமிழகத்தில் உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் வரும் 16 மற்றும் 18ம் தேதிகளில் 2 கட்டமாகநடைபெறவிருக்கிறது.

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழகத் தேர்தல் ஆணையாளர் பாண்டியன் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம்கூறியதாவது:

வேட்பு மனு பரிசீலனைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.

தமிழகத்தில் உள்ள 6 மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும கிராமபஞ்சாயத்துகளுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்றோடு முடிவடைந்தது.

இந்த வேட்பு மனுக்கள் அனைத்தும் நாளை (புதன்கிழமை) அந்தந்த தேர்தல் அதிகாரிகளின் அலுவலகங்களில்பரிசீலிக்கப்படும்.

பிறகு வரும் 5ம் தேதி வெள்ளிக்கிழமை போட்டியிடத் தகுதியான அனைத்து வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல்வெளியிடப்படும்.

மேலும் 5ம் தேதியன்றே வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணியும் ஆரம்பிக்கப்படும்.

16 மற்றும் 18ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். 21ம் தேதி வாக்கு எண்ணும் பணி ஆரம்பிக்கப்பட்டு, 22ம்தேதியே அனைத்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிடும்.

பிறகு தேர்தல் நடைமுறைச் சட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 25ம் தேதிபதவியேற்றுக்கொள்வார்கள்.

மாநிலம் முழுவதும் தேர்தல் நடக்கும் நாட்களில் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் தடுக்க, தகுந்த பாதுகாப்புநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற