காஷ்மீர் சட்டசபை தாக்குதல்: ஜெய்ஷ் -இ-முகமது தலைவரை ஒப்படைக்க பாகிஸ்தானுக்கு அத்வானி வற்புறுத்தல்

Posted By: Super
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பாகிஸ்தான் தீவிரவாதத்தை எதிர்ப்பது உண்மையென்றால் ஸ்ரீநகர் சட்டசபை கட்டிடத்தின் மீது கார் வெடிகுண்டுமூலம் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்என்று மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி பாகிஸ்தனை வலியுறுத்தியுள்ளார்.

கடந்த திங்கள்கிழமை ஸ்ரீநகரிலுள்ள சட்டசபை கட்டிடத்தின் மீது தீவிரவாதிகளின் தற்கொலை படையினர் கார்வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தினர். இதில் 42 பேர் கொல்லப்பட்டனர். 80க்கும் அதிகமானோர்படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு காரணம் பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்பட்டுவரும ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு என்றுதெரிய வந்துள்ளது.

இது குறித்து அத்வானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தான் ஒரு தீவிரவாத நாடு. பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்புகள் காஷ்மீரில் தொடர்ந்துதீவிரவாத செயல்களில் ஈடுபட்டுவருகின்றன.

பாகிஸ்தான் தீவிரவாதத்தை எதிர்ப்பது உண்மை என்றால் ஸ்ரீநதர் சட்டசபை கட்டிடத்தின் மீது கார் வெடிகுண்டுமூலம் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும்.

பாகிஸ்தானில் மேலும் பல தீவிரவாத இயக்கங்களும் செயல்பட்டு வருகின்றன. இவற்றிற்கு பாகிஸ்தான் தடைவிதிக்க வேண்டும்.

ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளை ஒழிப்பதில் மட்டும் அமெரிக்கா அக்கறை காட்டாமல், இந்தியாஉள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் உள்ள தீவிரவாச இயக்கங்களையும் ஒழிக்க அமெரிக்கா முன்வர வேண்டும்என்று கூறியுள்ளார்.

ஸ்ரீநகர் சட்டசபை கட்டிடத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தைப் பார்வையிடுவதற்காக அத்வானிஇன்று (புதன்கிழமை) காஷ்மீர் செல்கிறார்.

அப்போது அவர் ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு குறித்து அனைத்து உயர் அதிகாரிகள், அமைச்சர்களுடனும்ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற