போலீஸ்-காங்கிரஸ் எம்.எல்.ஏ. கட்டிப்புரண்டு சண்டை

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை:

செங்கம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. போளூர் வரதனுக்கும், போலீஸ்காரர் ஒருவரும் இடையே ஏற்பட்டமோதலில் எம்.எல்.ஏவின் சட்டை கிழிந்தது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.போக்குவரத்தும் ஸ்தம்பித்தது.

திருவண்ணாமலை கோவிலில் மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திர தினத்தன்றும், பவுர்ணமி தினத்தன்றும் சிறப்புபூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த தினங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

பவுர்ணமி தினமான கடந்த திங்கள்கிழமையன்றும் திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகஇருந்தது. போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணியிலும், பாதுகாப்பு பணியிலும் கலை, முருகன் என்ற இரண்டுபோலீசார் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இரவு 8.30 மணியளவில் செங்கம் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. போளூர் வரதன்,முன்னாள்மாவட்ட செயலாளர் சுப்ரமணியம் உள்ளிட்ட 4 பேர் கார்மூலம் திருவண்ணாமலை நோக்கி வந்தனர்.

போளூர் வரதன் எம்.எல்.ஏ. என்பதை அறியாத போலீஸ்காரர் முருகன், போளூர் வரதன் வந்த காரை நிறுத்தினார்.கூட்டம் அதிகமாக இருப்பதால் கார் நேராக செல்ல முடியாது என்று கூறினார்.

கடும்கோபம் கொண்ட போளூர் வரதன், காரிலிருந்தவாறே முருகனை மிரட்டினார். முருகனுக்கும் கோபம் வந்தது.அவரும் பதிலுக்கு பதில் கூறினார். இதனால் போளூர் வரதன் மற்றும் அவருடன் வந்தவர்களுக்கும் முருகனுக்கும்இடையே வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது.

ஒருவருக்கொருவர் சட்டையை பிடித்து இழுத்துக் கொண்டு மோதிக்கொண்டனர். இதில் போளூர் வரதன் மற்றும்அவருடன் வந்தவர்களின் வேட்டி, சட்டை கிழிந்தது.

இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. இந்நிலையில் அந்த பகுதி வழியேவந்த இன்ஸ்பெக்டர், எம்.எல்.ஏவை அடையாளம் கண்டு நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

தான் தகராறு செய்தது எம்.எல்.ஏவுடன் என்று அறிந்ததும் பயந்து போன போலீஸ்காரர் முருகன் அங்கிருந்துஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் டி.எஸ்.பி.லட்சுமி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டரைசம்பவ இடத்திற்கு விரைவாக அனுப்பி வைத்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற இன்ஸ்பெக்டர் கண்ணன், புகார் கொடுங்கள் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கைஎடுக்கிறோம் என்று எம்.எல்.ஏவிடம் கூறினார். ஆனால் அதை ஏற்க மறுத்த எம்.எல்.ஏ., டி.எஸ்.பியை வரச்சொல்லுங்கள் என்று கூறிவிட்டார்.

நீண்ட நேரம் பேசி எம்.எல்.ஏவை சமாதானம் செய்தார் கண்ணன். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ்காரர்முருகன் மீது நடவடிக்கை எடுப்பதாக கண்ணன் உறுதியளித்தார்.

அதன் பின் போக்குவரத்தும் சரி செய்யப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பதட்டம்நிலவியது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற